நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதற்கான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y
— Sun Pictures (@sunpictures) June 18, 2021