நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் முன்னிலை

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த 5-வது சுற்றில் கார்ல் சென்னை விழ்த்தி ஆனந்த் வெற்றி பெற்றார். இதன்மூலம், நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து அவர் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். முன்னதாக இந்த தொடரின் முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த், 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் கபில்தேவ் சாதனை முறியடிப்பு

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.ரி‌ஷப் பண்ட் அதிரடியாக ஆடி 96 ரன்னும், அஸ்வின் 61 ரன்னும், அனுமான் விஹாரி 58 ரன்னும் எடுத்தனர். 100-வது டெஸ்டில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்தார். 7-வது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 175 ரன் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இந்நிலையில், 1986-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 7-வது வீரராக களமிறங்கி 163 ரன் எடுத்த கபில்தேவ் சாதனையை ஜடேஜா நேற்று முறியடித்தார்.மேலும், ரவீந்திர ஜடேஜா ரிஷப் பண்ட், அஸ்வின் மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகியோருடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் மூன்று 100 ரன் பார்ட்னர்ஷிப்களில் அங்கம் வகித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.

சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், ஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.மேலும், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் 85 ரன்னும், கே.எல்.ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 40 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலானும், டி காக்கும் இறங்கினர். தொடக்கம் முதல் டி காக் அதிரடியாக ஆடினார். இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மலான் 91 ரன்னில் வெளியேறினார். அப்போது தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா 35 ரன்னில் அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய மார்கிரமும், வான் டெர் டுசனும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மார்கிராம் 37 ரன்னுடனும், வான் டெர் டுசன் 37 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெற்றார் விராட் கோலி

தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று . இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 🇮🇳 pic.twitter.com/huBL6zZ7fZ — Virat Kohli (@imVkohli) January 15, 2022

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் – இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் 12, மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, விராட் கோலி ஜோடி நிதானமாக ஆடியது. புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் அடுத்து வந்த ரஹானே 9, ரிஷப் பண்ட் 27, அஸ்வின் 2, ஷர்துல் தாகூர் 12, பும்ரா 0, முகமது சமி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகள் ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இந்த முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பை பக்கத்தில் வந்து இழந்தார். உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.தற்போது வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இந்தியா, 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 58 ரன்கள் எடுத்தார். புஜாரா 53 ரன்களும், ஹனுமா விகாரி 40 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது. கேப்டன எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி இலக்கை எட்டுவதற்கு 122 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய எல்கர், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் துசன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எல்கர்- டெம்பா பவுமா இருவரும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் எல்கர் 96 ரன்களுடனும், டெம்பா பவுமா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக டீன் எல்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்திய,தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை

இந்திய, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறினர். முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி, 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது. அணித் தலைவர் கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தர். 2- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 35 ரன்களுடன், ரகானே 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மெஸ்சிக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலக கால்பந்து புகழ் மெஸ்சி, இந்த சீசனில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியில் நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.பி.எஸ்.ஜி. அணி நாளை இரவு பிரெஞ்ச் கோப்பைக்கான போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் மெஸ்சி உள்பட நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.எஸ்.ஜி. அறிவித்துள்ளது.மெஸ்சியடன் ஜுயன் பெர்னாட், செர்ஜியோ ரிகோ, நாதன் பிட்டுமாஜாலா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 175 ரன்கள் எடுத்தது வங்காளதேசம்

 நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட்மாங்கானுவில் நேற்று தொடங்கியது.முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் நேர ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து இருந்தது.கன்வாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். புத்தாண்டில் செஞ்சுரி அடித்து சாதித்தார். அவர் 122 ரன்னும், வில்யங் 52 ரன்னும் எடுத்தனர். ஹென்றி நிக்கோலஸ் 37 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.நியூசிலாந்து அணி 108.1 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிக்கோலஸ் 75 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.வங்காளதேசம் அணி தரப்பில் ஷோரிப்புல் இஸ்லாம், ஹசன்மிராஸ் தலா 3 விக்கெட்டும், மொமினுல்ஹக் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் 22 ரன்னில், வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டான ஹசன்- நஜிமுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அபாரமாக விளையாடி அரை சதத்தை தொட்டனர். 55 ஓவர்வீசி முடிக்கப்பட்ட பிறகு வங்காளதேசம் 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து இருந்தது.இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 70 ரன்னிலும் மொமினுல் ஹக் 8 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

1 2 3 33