மீண்டும் வசூல் சக்ரவர்த்தி என நிரூபித்தார் தளபதி விஜய்

தமிழ்நாட்டில் விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருவது வாரிசு படம் பொங்கல் வின்னரா? அல்லது துணிவு படம் பொங்கல் வின்னரா? என்று தான்.

5 நாட்களில் அதிகம் வசூல் செய்தது யார்

முதல் நாளில் இருந்து துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிசு படத்தை விட அதிகமாக குவித்தது என பரவலாக சொல்லப்படுகிறது ஆனால் வாரிசு படம் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் முன் நோக்கி செல்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், துணிவு ரூ. 65 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு படமும் ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இதன்மூலம் தன்னுடைய முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளார் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *