பாராட்டு விழாவில் லோகேஷ் கனகராஜை புகழ்ந்த பாரதிராஜா

தமிழ் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பாரதிராஜாவிற்கு தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதன் பிறகு இவ்விழாவில் பேசிய பாரதிராஜா, “டெல்லி முதல் பல மேடையைப் பார்த்து உள்ளேன். ஆனால் இன்று பத்திரிகையாளர்கள் எனக்கு நடத்தும் இந்த நிகழ்வு மிகவும் நெருக்கமான ஒன்று. அந்தக் காலத்தில் என்னை தவறாக விமர்சித்து ஒரு ஊடகம் எழுதியுள்ளது. அதன் பின்பு நேரில் சென்று அதன் ஆசிரியரை திட்டிவிட்டேன். நான் தற்போது 4 தலைமுறை ஊடகத்தை பார்க்கிறேன், இந்தத் தலைமுறை ஊடக சூழல் மிகவும் நட்பாக மாறி உள்ளது. மேலும் இயக்குநர் லோகேஷ் சின்ன பையன், ஆனால் சாதனையில் பெரிய பையன். நான்கே படத்தில் நான்கு திசையையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டான்.நான் 40 படத்துல பண்ணத லோகேஷ் நாளே படத்துல பண்ணிக் காட்டிட்டான். அவன் மூஞ்ச நான் பார்த்ததில்லை. ஒரே தடவைதான் போன் பண்ணி பேசி இருக்கேன், அதுவும் விக்ரம் படத்தை பார்த்த பிறகுதான். கமல் ஒரு அற்புதமான கலைஞன், சினிமாவில் நிறைய இழந்திருக்கிறான். ஆனால் அது அனைத்தையும் லோகேஷ் கமலுக்கு ஒரே படத்தில் சம்பாதிச்சு கொடுத்துட்டான். அவனிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது” என்றார்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய விரும்பும் பிரபல பாடகி

இசையமைப்பாளர் அனிருத் திருமணம் குறித்து சமீப நாட்களாக பலவேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவர் பிரபல நடிகையை காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இரு தரப்பிலும் அதை மறுத்து விட்டனர். இப்போது பிரபல பாடகி ஜோனிடா காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிலளித்திருக்கிறார். அனிருத் – ஜோனிடா காந்தி அவரிடம் சூர்யா, ரண்பீர் சிங், அனிருத் இந்த மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த ஜோனிடா சூர்யா, ரண்பீர் சிங் இருவரும் திருமணம் ஆனவர்கள். அதனால் நான் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று ஜாலியாக பதிலளித்திருக்கிறார்.

உலகளவில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்…. கொண்டாடும் ரசிகர்கள்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1986-ல் வெளிவந்த ‘விக்ரம் திரைப்படம் பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது. தற்போது 2022-ல் வெளியாகியுள்ள புதிய ‘விக்ரம்’ திரைப்படம் போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டதாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் சூர்யா வந்தாலும் தன் முத்திரையை அழுத்தமாக பதித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். விக்ரம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது. வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் ஆனால், படத்தின் ஹிந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார். படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் நான் தூங்கவே இல்லை. எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்தவன். அதனால் மற்றவர்களை விட என்னை அந்தப் படம் கூடுதலாக பாதித்தது என தெரிவித்தார்.

அப்பா நலமாக உள்ளார்- நடிகர் சிம்பு அறிக்கை

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர் டி.ராஜேந்தர் . இவர் நடிகர் சிம்புவின் தந்தையாவார்.நேற்று முந்தினம் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். என தகவல் வெளியானது. அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.   Most courageous man #TRajendar sir .. he is super positive man .. our prayers for his speedy recovery brother @SilambarasanTR_ https://t.co/3SnwSRDpk5 — Obeli.N.Krishna (@nameis_krishna) May 24, 2022

கன்னத்தில் அறைந்த விவகாரம் – ஆஸ்கர் அமைப்பின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்கிறேன்- வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.அதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையே, ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.இந்நிலையில், ஆஸ்கர் அமைப்பின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சாதனை செய்து வரும் பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட்.இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில்,வெறித்தனமாக வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் யூ டியூபில் தொடர் சாதனையை செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது பீஸ்ட் ட்ரைலர் வெளிவந்து 4 மணி நேரத்தில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதாவது 4 மணி நேரத்தில் சுமார் 1.5 { ஒன்றரை கோடி } பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை செய்துள்ளது.பீஸ்ட் ட்ரைலர் செய்துள்ள இந்த சாதனையை விஜய்யின் ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.  

விஜய்யின் ‘பீஸ்ட்’ ட்ரைலர் இதோ

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட்.இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் ட்ரைலர் 1 நிமிடத்தில் சுமார் 2.5 லட்சம் பார்வையாளர்களையும், 43 லைக்ஸ் பெற்றுள்ளது.இதமூலம் விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

பிரபல நடிகை பலாத்கார வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு முக்கிய தொடர்பு ?

கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் திலீப் சாட்சியங்களை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.கடந்த 2 நாட்களாக நடிகர் திலீப்பிடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் 2-வது மனைவியும், பிரபல நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர் திடீரென பல்டி அடித்தார். இதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம்- உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது, மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்திருக்கிறார்.

1 2 3 50