50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும். இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், எஞ்சிய 30 கோடி தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.