பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து தனது மகனுடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தாங்கள் இருவரும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *