ஹெலிகாப்டர் விபத்தில் 5 போலீசார் பலி

கொலம்பியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பொலிவர்.‌ இங்குள்ள காண்டாகல்லோ என்கிற நகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 5 போலீசார் காண்டாகல்லோ நகரில் ஹெலிகாப்டரில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அவர்களது ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கொலம்பியா அதிபர் இவான் டியூக், விபத்தில் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அந்த 5 போலீசாரும் கொலம்பியாவின் கதாநாயகர்கள் எனக்கூறி புகழாரம் சூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *