கொரோனா வார்டுக்கே சென்று மக்களுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நடிகர் மனோபாலா!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க. ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. பதவியேற்ற நாளிலிருந்தே கொரோனா தடுப்புப் பணிகளுக்கான யுத்தத்தை தொடங்கி ஏகப்பட்ட திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறார்.சென்னையை விட கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் கோவைக்கு நேரடி விசிட் அடித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றார். அங்கே திடீரென பிபிஇ கிட் கவச உடையை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்து நெகிழச் செய்துள்ளார்.கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் விசிட் அடிப்பதை முன்னிட்டு கோ பேக் ஸ்டாலின் என்கிற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. ஆனால், கவச உடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொன்ன அடுத்த நொடியே #WeStandWithStalin என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதல்வர் ஸ்டாலின் செய்த முயற்சியை பார்த்த நடிகர் மனோபாலா “Hats off” என முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஷேர் செய்து பாராட்டி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *