இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ் சினிமா பிரபலங்களும் மறைந்து வருவது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்திக்கொள்ளும் நட்சத்திரங்கள் மக்களையும் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.