இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் நேற்று புதிதாக 2,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 133,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,016 பேர் நேற்று (12) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 107,657 ஆக அதிகரித்துள்ளது.
