உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில் வரும் 10ந்தேதி முதல் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
