புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் ஆட்சி எந்த திசையில் செல்லும் என்பதை சொல்லாமல் நிரூபித்த ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
வெ. இறையன்பு நியமனம் குறித்து பார்க்கும் முன், தமிழகத்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்களில் ஒருவர் வெ. இறையன்பு. 8க்கும் அதிகமான பட்டங்களை படித்துள்ள இவர், காஞ்சிபுரம் ஆட்சியர் பதவி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழக அரசில் பணியாற்றி இருக்கிறார். நம்பர் 1 1987ல் குடியுரிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தை பெற்று இவர் ஐஏஎஸ் ஆனார். நீண்ட அனுபவம் கொண்ட இவர்தான் தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர்.
 
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து ஓரம்கட்டுப்பட்டு வந்த இவரை திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளே டாப் பொறுப்பான தலைமை செயலாளர் பொறுப்பை வழங்கி உள்ளது. வித்தியாசம் மற்ற ஆட்சியாளர்களை விட கொஞ்சம் வித்தியாசமானவர் வெ. இறையன்பு. காரணம் முழுக்க முழுக்க ஊழலுக்கு எதிரான இவர், சின்ன சர்ச்சையில் கூட சிக்கியது இல்லை. மனதில் பட்டதை துணிந்து சொல்ல கூடியவர். எந்த வகையிலும் முறைகேடுகளை அனுமதிக்காதவர். 100+ புத்தகங்களை எழுதியவர் என்றாலும், எங்கும் தனக்காக தனிப்பட்ட விளம்பரம் தேடியது இல்லை.
 
எப்படி அதிமுக ஆட்சியில் இவர் மிகவும் ஸ்டிரிக்ட்டாக செயல்பட்டதால் பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படாமல் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டார். ஆட்சியாளர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு எஸ் சொல்லும் நபர் கிடையாது வெ. இறையன்பு. இதனாலோ என்னவோ அதிமுகவின் 10 வருட ஆட்சியில் பெரிய பொறுப்புகள் இல்லாமல், சின்ன சின்ன பொறுப்புகளில் இவர் நியமிக்கப்பட்டார்.
 
ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்ததும் நேர்மையான வெ. இறையன்புவை தலைமை செயலாளராக கொண்டு வந்து அசத்தி உள்ளார் ஸ்டாலின். ஆட்சி எந்த திசையில் செல்லும் என்பதை சொல்லாமல் ஸ்டாலின் நிரூபித்து உள்ளார். வெ. இறையன்பு தலைமை செயலாளராக இருக்கும் நிலையில், இதற்கு முன் நடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள், பல முறைகேடுகள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *