இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதி செய்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 922 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இலங்கையில் 115,590 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
