பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து கைபர் பகதுன்வா மாகாணத்தில் உள்ள மர்தான் என்ற இடத்திற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமான சென்ற பேருந்து திடீரென விபத்திற்குள்ளாகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இதில் 15 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர். காருடன் மோதாமல் இருக்க டிரைவர் முயற்சி செய்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *