தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
