ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு நிதி உதவி

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.இந்நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது.இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு கொரோனா உதவித் தொகையாக ரூ.37 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *