மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 157 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் 4 மணியளவில் திமுக 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.மேலும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *