இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான மருத்துவ சேவைகளை அணுகுவது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறீர்களோ அவ்வளவு பாதுகாப்பானது. இந்தியாவை விட்டு நாடு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்கள் இப்போது கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
