இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

இலங்கையில் ,கொரோனா வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்சமயம் நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் அபாய நிலையை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.நேற்றைய தினம் மாத்திரம் 23 ஆயிரத்து 700 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிக பிசிஆர் எண்ணிக்கையாக கருதப்படுகிறது.
இலங்கையில் இதுவரையில் 20 லட்சத்திற்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, இலங்கையில் கடந்த 5 நாட்களில் 5ஆயிரத்து 769 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஆக கூடுதலான தொற்றாளர்கள் இன்றைய (30) தினம் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 1662 என தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.தொற்று நோயியல் பிரிவின் அறிக்கைக்கு அமைவாக கடந்த ஐந்து நாட்களில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,769 ஆகும்.இதே போன்று ,இலங்கையில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 146 ஆகும். இவர்களுள் 11 ஆயிரத்து 769 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *