இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஓட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 270 பேர் உயிரிழந்தனர். அதில் இருந்து இலங்கை அரசு பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனால் முகத்தை மறைக்க தடைவிதிக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு பொது பாதுகாப்பு மந்திரி சரத் வீரசேகரா கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தார்.அந்த பரிந்துரைக்கு இன்று இலங்கை மந்திரி சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றபின் சட்டமாக்கப்படும்.இது சட்டமாக்கப்பட்டால் முஸ்லிம் பெண்கள் பர்காஸ் மற்றும் நிகாப் அணிய முடியாது. இந்த சட்ட முன் வடிவுக்கு பாதுகாப்பு மந்திரி சரத் வீரசேகரா ஒப்புதல் வழங்கியபோது, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.