இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்புகளை தடுக்க நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவுடனான பயணிகள் போக்குவரத்து நடைமுறையில் ஜெர்மனி சில மாற்றங்களை செய்து உள்ளது.எங்களுடைய தடுப்பூசி பிரசாரம் போலியாக மாறாமல் இருப்பதற்காக, இந்தியாவின் பயணிகளுக்கான போக்குவரத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.இதன்படி, இந்தியாவில் இருந்து ஜெர்மனிவாசிகளே நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை இன்று (ஞாயிற்று கிழமை) மாலை முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்து உள்ளார்.