இளவரசர் பிலிப் தனக்கென வடிவமைத்த காரில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99), கடந்த 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி வின்சர் கோட்டையில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கோட்டையில் இருந்து இளவரசர் பிலிப் உடல் வெளியே கொண்டு வரப்படுகிறது மவுன அஞ்சலி மற்றும் படை வீரர்களின் வீர வணக்கத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

இளவரசர் பிலிப், தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில், அவரது உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற அரச குடும்ப உறுப்பினர்கள் ராணி எலிசபெத் ஊர்வலத்தில் வராமல், நேரடியாக தேவாலயத்திற்கு காரில் வந்து சேர்ந்தார். இதேபோல் ஊர்வலத்தில் பங்கேற்காத அரச குடும்ப உறுப்பினர்களும் காரில் வந்தனர். இறுதி ஊர்வலத்தில் இளவரசர் ஹாரி பங்கேற்றார். ஆனால் அவரது மனைவி மேகன், கர்ப்பமாக இருப்பதால் பயணத்தை தவிர்க்கும்படி டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதனால் அவர் கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இருந்தபடியே இறுதிச்சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்தார் .இதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இறுதி நிகழ்வு காட்சிகளை தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *