இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கு இலங்கை தடைவிதித்துள்ளதால் – தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிற்கு தடைவிதித்துள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அடிப்படை வாதிகள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயலக்கூடும் என்ற தகவல்களை தொடர்ந்து தமிழ்நாட்டின் விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
அடிப்படைவாதிகள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குள் படகு மூலம் நுழைவதற்கும் மறைந்துவாழ்வதற்கும் முயலக்கூடும்,இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு திட்டமிடக்கூடும் என்ற அச்சம காணப்படுவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *