இலங்கையில் நாளை முதல் சதொச விற்பனை நிலையங்களில் 1000 ரூபா அடங்கிய பொதி வழங்கப்படும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன

இலங்கையில் எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங் கிய நிவாரண பொதி ஒன்றை 1000 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலை யங்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பந்துல தெரிவித்துள்ளார்.குறித்த நிவாரண பொதிகளை நாளை முதல் சதொச ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *