ஏப்ரலில் காதலி ஜூவாலா கட்டாவை கரம் பிடிக்கிறார் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் வரும் ஏப்ரல் மாதம் தனது காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.தனக்கான கதைகளை தேர்வு செய்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.அவரது தனித்துவமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு காரணம் அவருக்கும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் இடையிலான காதலே என்று கூறப்பட்டது.இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது. இதனை தொடர்ந்து ஜூவாலாவுடனான காதலை ஒப்புக் கொண்டார். ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் நள்ளிரவில் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.

அண்மையில் ஹைத்ராபாத்தில் ஆரண்யா படத்தின் ப்ரி வியூ நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால் விரைவில் ஜூவாலாவை திருமணம் செய்துக் கொண்டு தெலுங்கு மாப்பிள்ளை ஆக போகிறேன் என்றார். இந்நிலையில் ஜூவாலா கட்டாவும் தனது தோழிகளுக்கு பேச்சுலரேட் பார்ட்டி கொடுத்தார்.அந்த போட்டோக்கள் வைரலான நிலையில், இருவரின் திருமணம் குறித்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. அதாவது, விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *