இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது கொலைவெறித் தாக்குதல்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.குறித்த குழுவின் வீடியோ காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.இதனை தொடர்ந்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *