இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் மேலும் இறுதிக்கட்ட போரின்போது ஈழ தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது.அப்போது இந்தியா உள்பட 14 நாட்கள் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தன. வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அதேநேரத்தில் இந்தியா, இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை உடனே அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தலை உடனே நடத்தவும் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.