173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், தற்பொழுது திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னதாக வேட்பாளர் பட்டியலை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் இல்லத்தில்  கலைஞரின் படத்திற்கு முன்னும், கலைஞரின் நினைவிடமுள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன்பின் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் வெளியிட்டார். அப்பொழுது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.  தற்போது வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், ஆலங்குளம் – பூங்கோதை, அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன், போடி – தங்கத்தமிழ்செல்வன், முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன், நாகர்கோவில் – சுரேஷ் ராஜன், ராதாபுரம் – அப்பாவு, நெல்லை – ஏ.எல்.எஸ்.லட்சுமணன், திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன், பரமக்குடி – சே.முருகன், திருச்சுழி – தங்கம் தென்னரசு, தூத்துக்குடி – கீதா ஜீவன், திருச்சி மேற்கு – கே.என்.நேரு, விருதுநகர் – ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஓட்டப்பிடாரம் – சண்முகைய்யா, ராமநாதபுரம் – காதர் பாட்சா, ஒரத்தநாடு – ராமச்சந்திரன், ஆண்டிபட்டி – ஏ.மகாராஜன், மதுரை மேற்கு – சின்னம்மாள், மதுரை வடக்கு – கோ.தளபதி, சோழவந்தான் – வெங்கடேஷன், மதுரை கிழக்கு – மூர்த்தி, மானாமதுரை – தமிழரசி, திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்ணன், விராலிமலை – பழனியப்பன், பட்டுக்கோட்டை – அண்ணாதுரை, திருவையாறு – துரைசந்திரசேகர், கும்பகோணம் – அன்பழகன், திருவிடைமருதூர் – கோவி செழியன், நன்னிலம் – ஜோதிராமன், திருவாரூர் – பூண்டி கலைவாணன், மன்னார்குடி – ராஜா, வேதாரண்யம் – எஸ்.கே.வேதாரத்தினம், பூம்பகார் – நிவேதாமுருகன், குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் – அய்யப்பன், ஜெயங்கொண்டம் – கண்ணன், பெரம்பலூர் – பிரபாகரன், துறையூர் – ஸ்டாலின்குமார், திருக்கோவிலூர் – பொன்முடி, கரூர் – செந்தில்பாலாஜி, ஆயிரம்விளக்கு – மருத்துவர் எழிலன், சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் – ஸ்டாலின், காட்பாடி – துரைமுருகன், ஓட்டன்சத்திரம் – சக்ரபாணி, தி.நகர் – ஜெ.கருணாநிதி, ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன், துறைமுகம் – சேகர்பாபு, எழும்பூர் – பரந்தாமன், வில்லிவாக்கம் – வெற்றியழகன், பெரம்பூர் – ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் – எபினேசர், திருச்சுழி – தங்கம்தென்னரசு, தஞ்சை – நீலமேகம், முசிறி – தியாகராஜன், மண்ணச்சநல்லூர் – கதிரவன், திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ், ஆத்தூர் – பெரியசாமி, பழனி – செந்தில்குமார், பொள்ளாச்சி – வரதராஜன், கிணத்துக்கடவு – பிரபாகரன், சிங்காநல்லூர் – கார்த்திக், தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி, திருப்பூர் தெற்கு – செல்வராஜ், மேட்டுப்பாளையம் – டி.ஆர்.சண்முகசுந்தரம், கோபி – மணிமாறன், அந்தியூர் – வெங்கடாசலம், காங்கயம் – சாமிநாதன், ஈரோடு மேற்கு – முத்துசாமி, குமாரபாளையம் – வெங்கடாசலம், நாமக்கல் – ராமலிங்கம், ராசிபுரம் – மதிவேந்தன், வீரபாண்டி – தருண், சேலம் தெற்கு – சரவணன், சேலம் வடக்கு – ராஜேந்திரன், சேலம் – ஆ.ராஜேந்திரன், எடப்பாடி – சம்பத் குமார், சங்கராபுரம் – உதயசூரியன், உளுந்தூர்பேட்டை – மணிகண்டன், விக்கிரவாண்டி – புகழேந்தி, திண்டிவனம் – சீதாபதி சொக்கலிங்கம், மயிலம் – மாசிலாமணி, செய்யார் – ஜோதி, செஞ்சி – மஸ்தான், கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி, திருவண்ணாமலை – ஏ.வ.வேலு, செங்கம் – கிரி, பாப்பிரெட்டிப்பட்டி – பிரபு ராஜசேகர், பென்னாகரம் – இன்பசேகரன், பாலக்கோடு – முருகன், கிருஷ்ணகிரி – செங்குட்டுவன், ஜோலார்பேட்டை – தேவராஜ், நத்தம் – ஆண்டி அம்பலம்  என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பல்வேறு எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளதால், அண்ணா அறிவாலயம் முன்பு திமுகவினர் பாட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *