ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் வைகோ!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முழு வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், அ.ம.மு.க. இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மல்லை சத்யா, சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரகுராமன், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் சின்னப்பா, பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் முத்துரத்தினம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சதன் திருமலைக்குமார், மதுரை (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில் பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *