தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகத் தொடங்கி உள்ளன. அவ்வகையில் தேர்தல் கள நிலவரம் மக்களின் மன நிலை தொடர்பாக டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக இணைந்த அணிக்கு 65 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேபோல் கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என டைம்ஸ்நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு கூறுகிறது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி 82 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 56 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாஜக-1, இதர கட்சிகள்-1 தொகுதியில் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.