எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார் .முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.
* அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகியது.
* தேவர் சமுதாயத்தை சேர்ந்த 8 அமைச்சர்களும், அந்த சமுதாயத்தை புறந்தள்ளி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.