மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.கர்ணன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
#Karnan teaser .. very soon
— Dhanush (@dhanushkraja) March 4, 2021