இலங்கையில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுக்கவேண்டும்-சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு

  இலங்கையில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுக்கவேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க வோசிங்டன் போஸ்டில் எழுதியுள்ள கட்டுரைக்கான டுவிட்டர் பதிவில் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு இதனை தெரிவித்துள்ளது.பத்திரிகை சுதந்திரம் என்பது எந்த ஜனநாயகத்தினதும் அடிப்படை கொள்கை என வெளிவிவகார குழு தெரிவித்துள்ளது.அதேபோன்று குற்றங்களை இழைத்தவர்கள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுதலும் முக்கியமான நடவடிக்கை என சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.பத்திரிகையாளரின் கொலைக்காக நீதிவழங்கப்படுதலில் இருந்து தப்பித்தல் இந்த இரண்டு கொள்கைகளையும் ஆழமாக அலட்சியம் செய்கின்றது என சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு தெரிவித்துள்ளது.மனித உரிமைகளிற்கான தனது தலைமைத்துவத்தை அமெரிக்கா மீள உறுதி செய்யவேண்டும்,இலங்கையில் நீதிக்கான குரல்களிற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கவேண்டும் என வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *