“கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி” குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் வௌியிடப்பட்ட வர்த்தமானி மீளப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை.இது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை நாம் கிடைக்கும் வரை என்றும் தொடர்வோம்.பாராளுமன்றத்திற்குள்ளும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இதற்கு எதிராக நான் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தேன். 20 இற்கு ஆதவளித்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதிகாத்தனர். எனினும் நானும் இதுகுறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பியிருந்தேன்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது கூட நாம் இது குறித்து பலமானதொரு செய்தியினை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்தோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *