தெற்காசியாவில் இரு நாடுகளிடையே போா் ஏற்பட்டால் அது சா்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- பாகிஸ்தான்

தெற்காசியாவில் இரு நாடுகள் தங்களுக்கிடையே போரில் ஈடுபட்டால், அது பிராந்திய நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன், உலக வா்த்தகப் போக்கு பாதிக்கப்படுவதுடன், சா்வதேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை இந்தியா அணு ஆயுதமயமாக்கிவிட்டது. இந்தப் பிராந்தியத்தில் நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்புக்கும் கூட்டுறவுக்கும் மிகச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், சில நாடுகள் தங்களது ராணுவ வல்லாதிக்கத்தை பறைசாற்றுவதற்காக ஆயுதப் போட்டியை ஏற்படுத்திவிட்டன.

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக் கட்டமைப்பில் பாகிஸ்தானுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அந்த கடல் பகுதியில் கடல் கொள்ளைத் தடுப்பு, அகதிகள் கடத்தல் தடுப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஆகிய பணிகளை பாகிஸ்தான் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

சா்வதேச அளவில் கடல் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாகிஸ்தான் நன்கு உணா்ந்துள்ளது. கடல் பாதுகாப்பாக இருந்தால்தான் கடல் வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்; சமூக-பொருளாதார வளா்ச்சியும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

கடல் பாதுகாப்பில் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக உள்ளது என கராச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கடல்சாா் மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி பேசினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *