மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ‘போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.இந்நிலையில், யாங்கூன், மாண்டலே, தலைநகர் நேபியிதா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்றும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.இதுதொடர்பாக, மியான்மருக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளது.