மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம் திகதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டபோதே, ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
அந்த அவசரநிலையின்கீழ் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை. எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.அந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவையும் மீறி, ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.
இன்னிலையில் ராணுவ புரட்சி பற்றி இதுவரை மவுனம் காத்து வந்த தளபதி மின் ஆங் ஹலேங், நேற்று முன்தினம் இரவு தனது மவுனத்தை கலைத்து டி.வி. மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தேர்தலில் நடைபெற்ற மோசடியால் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை நியாயப்படுத்தினார். தேர்தல் மோசடிகளை தேர்தல் கமிஷன் விசாரிக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் கமிஷனை மாற்றியமைத்து,மியான்மரில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதி அளித்தார்.