சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர், இந்திகா தொடங்கொட, சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. சீன ரயில் பிரேக்குகள் சரி இல்லை. இதனால் சமீப காலங்களில் 200க்கும் அதிகமானா விபத்துகள் ஏற்பட்டுள்ளன.சீனாவில் தயாரிக்கப்படும் ரயில்களின் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் டிரைவர்கள் அந்த ரயில் வண்டிகளை புறக்கணிப்பார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.