வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்திருந்தது.இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லித்தோஸ் தாஸ் 38 ரன்னில் வெளியேறினார். ஷாகிப் 68 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 168 பந்தில் சதம் 103 ரன்கள் விளாசி வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் (103) விளாசினார். ஷத்மான் இஸ்லாம் 59 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 68 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். ஜெர்மைன் பிளாக்வுட் 68 ரன்களும், கைல் மேயர்ஸ் 40 ரன்களும், ஜோஷுவா டி சில்வா 42 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.