கடந்தமாதம் இலங்கை தலைவர்களை சந்தித்தவேளை நல்லிணக்க முயற்சிகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றிற்கு பதில்அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் நீதி சமாதானம் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டம் உட்பட ஆக்கபூர்வமான அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிற்கும் இது பொருந்தும் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.