ஐக்கிய நாடுகள்பாதுகாப்பு சபை செவ்வாய்கிழமை மியன்மார் இராணுவ நடவடிக்கை குறித்து ஆராய்ந்த போதிலும் சீனாவின் ஆதரவு இல்லாததன் காரணமாக மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் தீர்மானம் சாத்தியமற்றதாக மாறியுள்ளது. .
சீனாவிற்கு பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.மியன்மார் இராணுவத்திற்கு எதிராக தடைகளை விதிப்பது அல்லது சர்வதேச அழுத்தங்களை கொடுப்பது நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றும் என கடந்த சில நாட்களாக சீனா தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளில் இருந்து சீனா நீண்டகாலமாக மியன்மாரை பாதுகாத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது .