ஜேர்மனியில் ஏப்ரல் மாதம் வரை கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு காணப்படும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.தடுப்புமருந்திற்கான தட்டுப்பாடு காரணமாக மிகவும் சவாலான பத்து வாரங்களை நாங்கள் எதிர்கொள்ளப்போகின்றோம் என சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அஸ்டிராஜெனேகாவிற்கும் இடையில் மருந்து வழங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு உருவாகியுள்ள நிலையிலேயே ஜேர்மனின் சுகாதார அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.ஜேர்மனி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை மந்தகதியில் முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.