சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.இக்கணக்கெடுப்பில் ஆய்வுக்குட்பட்ட 180 நாடுகளில் இலங்கை 38/100 புள்ளிகள் பெற்று 94ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.இதேவேளை இந்தியா கடந்த 2019ஆம் ஆண்டை விட 2020ல் ஆறு இடங்கள் பின்தங்கி 86ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.மேலும் டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிகக்குறைந்த ஊழலுள்ள நாடுகளாக 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன அதேவேளை சிரியா, சோமாலியா, தென் சூடான் ஆகியன முறையே 14,12 மற்றும் 12 புள்ளிகளுடன் கடைசியாக இடம்பெற்றுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் புள்ளி நிலையானதாக இருந்தாலும் 2018ஆம் ஆண்டில் 89 ஆவது இடத்திலிருந்து கீழிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.