இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 344 ரன்கள் எடுத்தது பின்னர் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 35.5 ஓவர்களில் 126 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.முதல் போட்டி 5ஆம் திகதியும், 2-வது போட்டி 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் “உலகின் தலைசிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதென்பது சவாலான காரியம் எனத் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக நாங்கள் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளோம். இந்திய மண்ணில் எங்கள் ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்.அயலக மண்ணில் நாங்கள் தடுமாறி இருந்தாலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றுள்ளது ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் .