அடுக்குமாடி குடுயிருப்பில் மதுபோதையில் ரகளை நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்- நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு

தமிழில் வெண்ணிலா கபடி குழு,படத்தின் மூலம் அறிமுகமாகி பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கோட்டூர் புரத்தில் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவும் சந்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் புகார் காவல்துறை கூடுதல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலர் அடுக்குமாடி குடுயிருப்பில் வசித்து வரும் நிலையில், விஷ்ணு விஷாலின் செயல் தொந்தரவு அளிப்பதாகவும், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள், விஷ்ணு விஷால் வீட்டிற்கு வந்து செல்வதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“நான் படப்பிடிப்பிற்காக சிக்ஸ்பேக் வைத்திருப்பதால் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிக்கவில்லை. நான் இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகி உள்ளது. வேறு சில காரணத்தினால் பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்தி இருக்கின்றனர் குடியிருப்புவாசிகள்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *