நான்கு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டமை குறித்து இலங்கை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிக்கின்றது.இந்த விவகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றின் கீழ் வருவதால் தன்னால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அதேவேளை சட்டமாஅதிபர் திணைக்களமும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.