![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Nadarajan5.jpg)
தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியிலும் அறிமுகம் ஆனார்.முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்தது. இவர் அறிமுகமான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் அறிமுகமான அவர் 3 விக்கெட் சாய்த்தார்.வெற்றி சந்தோசத்தில் சொந்த ஊர் திரும்பிய டி நடராஜன், இன்று சேலம் சின்னப்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியது, சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது. ஆஸி.,யில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. சக வீரர்கள் , பயிற்சியாளர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர். அறிமுக வீரர் என கருதாமல் அணியினர் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.பிறந்த குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன்.ஆஸி.,யில் வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால் தான் வெற்றி கைவசமானது.ஒற்றை சிந்தனையுடன் கடினமாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சியாக உள்ளேன். கடின உழைப்பு நிச்சயம் பலன் கொடுக்கும் என்பது தான் அனைவருக்கும் நான் கூற வரும்புவது. இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.