வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இறுதி நாளான நேற்று அவரின் மகளான டிஃப்பனி டிரம்பின் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அதனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து நேற்றைய தினம் வெளியேற வேண்டும்.இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப்பின் மகளான டிஃபனி ட்ரம்ப்புக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது இதுகுறித்து டிஃபனி ட்ரம்ப் தன் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது .வெள்ளை மாளிகையில் தனது தந்தையின் கடைசி நாளை மறக்க முடியாததாக மாற்றவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தனது நிச்சயதார்த்ததை நடத்தவும், இவ்வாறு ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் மிகவும் சிறப்பானது தனது நிச்சயதார்த்த விழா என்றும் டிஃபனி ட்ரம்ப் தன் சமூகவலைதள பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.