பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகின.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த 14ம் திகதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.நீண்ட மாதங்களுக்கு பிறகு படங்கள் பெரிய அளவில் வெளியாவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.3 நாட்களில் விஜய்யின் மாஸ்டர் சென்னையில் மட்டும் 50 வீத இருக்கைகளுடன் ரூ. 3.33 கோடி வசூலித்துள்ளது.சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் ஈஸ்வரனும் மக்களை கவர்ந்துள்ளதுடன் 2 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் 39 லட்சம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.