ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் நீண்டகாலமாக ஐரோப்பிய மற்றும் சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்தில் அடுத்து பொறுப்பேற்க இருக்கும் நபரை இன்று பிரதிநிதிகள் கூடி தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.மெர்க்கலைப் பொருத்தவரை, 2018 ம் ஆண்டு அவர் தனக்கு அடுத்து தனது ஆதரவாளரான அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுர்ஐத் தான் தன் இடத்தில் அமர்த்தினார்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உள்ளூர் தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவர் பதவி விலகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் .உண்மையில், ஏஞ்சலாவின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் சி.டி.யுவுக்கு ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் இன்று கூடி தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.அவர்தான் அடுத்து சேன்ஸலராவாரா என்பது பின்பு தான் தெரிய வரும் . இந்நிலையில் அடுத்த சேன்ஸலருக்கான போட்டியில் அர்மின் லாசெட் – பிரபலமான தாராளவாதி ஜெர்மனியின் ஒரு மணிலா முதல்வராக இருக்கிறார் மற்றும் நோர்பர்ட் ரோட்ஜென், ப்ரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் தற்போது உள்ளார்கள்.ஆனால், மக்கள் பவேரிய முதல்வரான மார்கஸ் சோடரைத்தான் அடுத்த சேன்ஸலராக பார்க்க விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஏஞ்சலா மெர்க்கல் வரும் செப்டம்பர் மதத்துக்கு முன் பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.